Image

மணமுறிவு வேண்டாம்,திருமணம் என்ற அருட்சாதனம் வழியாக க…
image

மணமுறிவு வேண்டாம்,திருமணம் என்ற அருட்சாதனம் வழியாக கடவுளாலே இணைக்கபட்டோம்,ஆகவே சாகும் வரையில் இணைந்து வாழ்வோம்
——————————————————————————–
‘’திருமணமானவர்களுக்கு நான் கட்டளையாக சொல்வது இதுவே;’ மனைவி கணவனிடம் இருந்து விலகி வாழக்கூடாது’ இது என்னுடைய கட்டளை அல்ல ஆண்டவருடையது 1.கொரி..7.11’’
என் அன்பு கிறிஸ்தவ விசுவாசிகளே இன்று மணமுறிவால் பல கிறிஸ்தவ குடும்பங்கள் அமைதி இன்றி வாழுகிறது
இதற்குரிய காரணம்.வரதட்சணை கொடுமை,
சந்தேகம்,
தவறான உறவு
நான் என்ற கர்வம்
யார் பெரியவர் என்ற ஈகோ ,
இப்படி இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.
ஒருநாள் தியான நிலையத்தில் காதலித்து கல்யாணம் செய்த ஒரு சிறுவயது தம்பதியினர் வந்து இருந்தனர் அவர்களிடம் என்ன பிரச்சனை என்று கேட்கப்பட்டது.
அப்போது அங்கேயே அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் குறைகூறி சண்டை போட தொடங்கினர்.
‘.வேலைக்கு போற இடத்துல இவள் ஒருவனோடு தொடர்பு வைத்து இருகிறாள்’ என்றார் கணவன். .
‘தினமும் குடித்து விட்டு வந்து இவர் என்னை அடித்து தொந்தரவு செய்கிறார்’ என்றார் மனைவி
இவர்களின் பிரச்சினை சந்தேகம் தான்,
இதை இவர்களின் உள்ளத்தில் ஏற்படுத்துபவன் சாத்தான்.
சாத்தான் இவர்களை பொய் சொல்லவைத்து,சந்தேகப்பட வைத்து இருவரையும் பிரித்து விடுகிறான்
இவர்கள் இருவரும் திருமண நாளில் ஆவியானவரிடம் சத்தியபிரமானம் கொடுத்து இருப்பார்கள்.ஆனால் இவர்களில் ஆவியானவரை ஆளுகை செய்ய விடாததால்,சாத்தான் இவர்களை ஆட்கொண்டு இப்படிப்பட்ட பிரச்சினைகளை உண்டுபண்ணுகிறான்.
கணவன்மார்களே எக்காரணத்தை கொண்டும் உங்கள் மனைவி மீது சந்தேகம் கொள்ளதீர்கள்.
நீங்கள சந்தேகம் கொள்ளும் உங்கள் மனைவி ஒருவேளை நல்லவராக இருந்தால்,நீங்கள் மிகப்பெரிய பாவியாகிவிடுவீர்கள்
ஒருவேளை உங்கள் மனைவி கெட்ட நடத்தை உள்ளவராக இருந்தால் கூட , நீங்கள் உங்கள் மனைவி மீது கொண்ட மட்டற்ற நம்பிககையினால் மகிழ்வோடு வாழ்வீர்கள்.
ஆனால் கெட்டநடத்தையுடைய உங்கள் மனைவி நிம்மதியாக வாழமுடியாது.அவள் மீது நம்ம்பிக்கை கொண்ட உங்களுக்கு செய்கின்ற துரோகத்திற்கு கடவுளிடம் அவள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அந்த துரோகியை கூட நம்பி குடும்பம் நடத்திய நீங்கள் கடவுள் முன் உயர்ந்த மனிதராய் நிற்பீர்கள்
மனைவியை முழுமையை நம்பிய உங்களுக்கு, நம்பிக்கை துரோகம் செய்த உங்கள் கெட்ட மனைவி , கொடிய தண்டனையை பெற்று கொள்வாள்
இது இருவருக்கும் பொருந்தும்.ஆகவே,தம்பதியருள் சந்தேகம் வேண்டாம்
மாவீரன் அலெக்ஸாண்டர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, வைத்தியம் செய்ய வந்த வைத்தியர், ஒற்றன் ஒருவன் கொடுத்தனுப்பிய ஒரு ஓலையையும் கொடுத்தார்.அதை வாங்கி படித்த அலெக்ஸாண்டர்,வைத்தியரிடம் மருந்தை வங்கி சாப்பிட்டுவிட்டு,
‘’வைத்தியரே நீங்கள் கொடுத்த ஓலையில் என்ன எழுதியிருந்தது என தெரியுமா?’’என்று கேட்டார்,
‘’தெரியாது மன்னா’’என்றார் வைத்தியர்
‘’நீங்கள் கொண்டு வந்த மருந்தில் என்னை கொல்ல விஷம் வைத்துள்ளீர்கள் என எழுதியிருக்கிறது‘’என்றார் மன்னர்
‘’ஐயோ,மன்னா பின்னர் ஏன் அந்த மருந்தை சாப்பிட்டீர்கள்?’’என்றார் வைத்தியர்
‘’வைத்தியரே,நான் உங்களை முழுமையாக நம்புகிறேன்,ஒருவேளை நீங்கள் என்னை கொல்ல சதி செய்தாலும் பரவாயில்லை,ஏனென்றால் அலெக்ஸாண்டர் அருகில் இருந்தவர்களையே நம்பாத நம்பிக்கை கெட்டவன் என்று நாளைய சரித்திரம் என்னை சொல்லகூடாது மாறாக நம்பியவன் செய்த துரோகத்தால் வீழ்ந்தான் மாவீரன் அலெக்ஸாண்டர் என்று சொல்லட்டும்’’என்றாராம்
அரசனின் நம்பிக்கை இப்படி என்றால் ஒரு அறைக்குள்ளே இணைந்து வாழுகின்ற கணவன் மனைவி எப்படி ஒருவரையொருவர் நம்பவேண்டும்,சிந்தித்து பாருங்கள்……
நம்பிக்கை அன்பு,பொறுமை,தன்னடக்கம்,அமைதி ஆகிய தூயஆவியின் கனிகள் [கலா5;22] நம்மிடம் இருத்தல்வேண்டும்
இந்த தூய ஆவியின் கனிகள் அனைத்தும் உறுதி பூசுதல் மூலம் நாம் ஏற்கனவே பெற்று உள்ளோம் அந்த ஆவியின் கனிகளை சாத்தான் நம் இதயத்தில் இருந்து எடுத்து விடாதபடி நாம் தான் பாது காத்துகொள்ளவேண்டும்
திருச்சபை கிறிஸ்துவுக்கு பணித்திருப்பது போல மனைவியரும் தங்கள் அனைத்திலும் கணவருக்கு பணிந்திருக்க வேண்டும்,கிறிஸ்து திருச்சபையை அன்பு செய்தது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள் எபே.5.22,23
கடவுள் உங்களை அமைதியுடன் வாழவே இணைத்துள்ளார்
மணமான சகோதரனே,சகோதிரியே உங்களால் கணவனோ,மனைவியோ மீட்படையாலாம
அன்பு கிறிஸ்தவ விசுவாசிகளே நம் குடும்பத்தில் உள்ள உறவுகளுக்கு நாம் திருமணம் என்கிற அருட்சாதனத்தை சொல்லி கொடுப்போம
.ஆவியானவரின் துணையோடு பிசாசின் தந்திரங்களை முறியடிப்போம்
உங்களை இணைத்தவர் உண்மை உள்ளவர் நீங்களும் அவருக்கும்,குடும்பத்திற்கும்,பிறருக்கும் உண்மையை இருங்கள்
இதுவே கிறிஸ்தவ வாழ்வு உங்கள் பிரச்சனைகளை நீங்களே பேசி சாமாதானம் ஆகுங்கள்.கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்று மகிழுங்கள்

This post is pressed by Chikoo

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s